தொடர்புடைய செய்திகள்
- வங்கக்கடல் சுழற்சி: இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; நாளையும் மழை பெய்யும்..!
- அடுத்த ஒரு வாரத்திற்கு காத்திருக்குது செம மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
- தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!
- 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- 4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!
13 மாவட்டங்களை வெளுக்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தின் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்றும் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
