வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (17:18 IST)

மழை நீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்! பொதுமக்கள் கடும் அவதி..!

சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும், இதனால் பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து சிக்கலாக உள்ளது என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் மழை நீரில் மிதக்கிறது என்றும், அதிகப்படியான மழைநீர் சூழ்ந்து இருந்த காரணத்தினால் முதலமைச்சர் அவரது தொகுதிக்கு உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொளத்தூரில் உள்ள முக்கிய பகுதிகள் அனைத்தும் தீவு போல் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran