1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (07:29 IST)

சென்னையில் நள்ளிரவு முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையின் பல இடங்களில் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு மழை பெய்தது அடுத்து தட்பவெப்பநிலை குளிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது