திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (10:28 IST)

இன்று 12 மாவட்டங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
கனமழை காரணமாக ஒருசில இயற்கை பேரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், உயரமான இடங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளம், மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து தள்ளி இருக்கவும், தேவையான பொருட்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva