ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி: சென்னையில் கனமழை தொடரும்..!
ஆந்திரா கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதையும, இந்த மழை நாளையும் தொடரும் என்பதையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் இன்னொரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்றும் நாளையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், நாளையும் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தீபாவளி விற்பனை மற்றும் நாளை தீபாவளி கொண்டாட்டம் இருக்கும் நிலையில், இன்றும் நாளையும் மழை பெய்யும் என்ற வானிலை அறிவிப்பு பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது."
Edited by Siva