தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காற்று திசை வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் சென்னையிலும் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது