திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (20:24 IST)

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு  உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அமைச்சர் கூறியுள்ளதாவது :

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள்  காலை 10:30 மணி தேர்வுக்கு 9:45 க்கே வர வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை  பரிசோதனை நடத்தப்படும்  அதன்பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்க்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு 2 முகக்கவசங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருதாகவும் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.