வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (08:33 IST)

காரின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம்.. ஹவாலா கும்பல் சிக்கியதால் பரபரப்பு..!

காரில் ரகசிய அறை அமைத்து கட்டு கட்டாக பணத்தை கடத்திய ஹவாலா கும்பல் பிடிபட்டுள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை போலீசார் நிறுத்த சொல்லினர். ஆனால் அந்த கார் திடீரென நிற்காமல் சென்றதால் போலீசார் ஜீப்பில் விரட்டி காரை நிறுத்த வைத்தனர்

அதன் பின்னர் வாகனத்தை சோதித்த போது காரின் கீழே ரகசிய அறை அமைத்து அதில் கோடி கணக்கில் ஹவாலா பணம் பதுக்கி வைத்ததை கண்டுபிடித்தனர்.  இதனை அடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததாகவும் விசாரணையில்  முகமது நிசார் என்பவர் தான் அந்த காரை ஓட்டி வந்ததாகவும் தெரிகிறது.


இந்த பணம் கோவையிலிருந்து வந்ததாகவும் மலப்புரம் என்ற பகுதியில் உள்ள ஒருவரிடம் கொடுக்க தனக்கு ஆணை இடப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த காரில் இருந்தவர் மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பணத்தையும் கைப்பற்றி உள்ளனர். ரூ.1.9 கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva