1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (11:17 IST)

மும்பையில் தப்பி ஓடிய தஷ்வந்த் - போலீசார் வெளியிட்ட வீடியோ

தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், போலீசாரிடமிருந்து தப்பி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.


 
சென்னையை சேர்ந்த சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், பணம் மற்றும் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய நிலையில் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான். 
 
அந்த நிலையில் இன்று தஷ்வந்த் சென்னைக்கு வரப்படுவான் என்று கூறப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக திடுக்கிடும் செய்தி வெளியானது. 
 
மும்பை பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பியதாகவும், மீண்டும் தஷ்வந்தை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அந்நிலையில், தப்பி ஓடிய இடத்திலிருந்து சிறிய தொலைவில், அதாவது மும்பை அந்தேரியில் அவர் மீண்டும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
 
வருகிற சனிக்கிழமைக்கு அவர் சென்னை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்வார்கள் எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், போலீசாரிடமிருந்து தஷ்வந்த் தப்பி ஓடுவதும், அவரை பின் தொடர்ந்து போலீசார் ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.