#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை - டிரெண்டிங் பின்னணி என்ன?
#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதன் பின்னணி குறித்த விவரம் இதோ...
சமீபத்தில், தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் 6 சாதியை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய 6 சாதிகளுக்கு தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆனால் இவர்கள் பட்டியலினத்தின் கீழ் வருகின்றனர். எனவே, இதனை நீக்குமாறு #பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.