புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 மே 2018 (13:35 IST)

பத்திரிகையாளர் குறித்து அவதூறு: அதிமுக பிரபலம் கட்சியில் இருந்து நீக்கம்

பத்திரிகையாளர் குறித்து அவதூறு: அதிமுக பிரபலம் கட்சியில் இருந்து நீக்கம்
பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை டுவிட்டரில் தெரிவித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் என்பவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
 
இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தூத்துகுடியில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து டுவிட்டரில் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை ஹரிபிரபாகரன் பயன்படுத்தியுள்ளார். 
 
பத்திரிகையாளர் குறித்து அவதூறு: அதிமுக பிரபலம் கட்சியில் இருந்து நீக்கம்
இதற்கு பத்திரிகையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதிரடியாக ஹரிபிரபாகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதிமுகவின் கொள்கை-குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,  காஞ்சிபுரம் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.