தொடர்புடைய செய்திகள்
- தமிழக நதிகளை இணைக்க ரூ.3 லட்சம் கோடி போதும்: மாணவியின் அசத்தல் ஐடியா
- கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் முதல் பேட்டி
- ரஜினி கட்சி ஆரம்பித்தால் முதலில் சேருவது இந்த காங்கிரஸ் எம்பி தான்: கராத்தே தியாகராஜன்
- பரதம் பயிலும் கங்கனா!! எல்லாம் தலைவிக்காக...
- நீலாங்கரையில் திபேத் மாணவர் சங்க தலைவர் கைது! – திபேத்தியர்களை குறிவைக்கும் போலீஸ்!
’தல’, தளபதிக்கு ஆயுதபூஜை வாழ்த்து கூறிய ஹர்பஜன்சிங்!
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்தாரோ அப்போது முதல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் டுவிட்டுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அவரது டுவீட்டில் பெரும்பாலும் தமிழ் சினிமா குறித்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்றும் இன்றும் தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
துர்கை அம்மன் துணை!! பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது #தல யின் #நேர்கொண்டபார்வை. அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய வீரம் கொண்டு #பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் #தளபதி யின் #சிங்கபெண்களே. இனிய #விஜயதசமி நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு தல ரசிகர்களும், தளபதி ரசிகர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஒரே ஒரு டுவிட்டுக்கு 36 ஆயிரம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
துர்கை அம்மன் துணை!!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 8, 2019
பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது #தல யின்#நேர்கொண்டபார்வை.அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய
வீரம் கொண்டு #பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் #தளபதி யின் #சிங்கபெண்களே.இனிய #விஜயதசமி நல்வாழ்த்துகள் #HappyDussehra
