வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (23:12 IST)

தமிழ் ஊடகங்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த முறை அவர் தமிழ் ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார். பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் தமிழக ஊடகங்களுக்கு அவர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



 


தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஹெச்.ராஜா, விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டம் குறித்த செய்திகளில் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகளின் இதுபோன்று போராட்டங்கள் நடத்தினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பிரதமரை இழுப்பவர்கள் தேச துரோகிகள் என்று கூறினார்.