1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (13:47 IST)

அமித்ஷா நினைத்தால் இன்றே ஆட்சி மாற்றம்: எச்.ராஜா பேச்சால் பரபரப்பு

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் கண்டனத்தை பெற்று வரும் நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நினைத்தால் இன்றே ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் இல்லை என்பதும், புதுச்சேரியை அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
புதுச்சேரி மாநிலத்தில் கவர்னராக பாஜகவின் ஆதரவாளர் கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுகளில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டி வருகிறார்
 
இந்த நிலையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எச்.ராஜா, 'அமித்ஷா நினைத்தால் புதுச்சேரியில் இன்றே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும், ஏனெனில் புதுச்சேரி காங்கிரசிலும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.