ஸ்டாலின் எந்த காலேஜ்ல பொருளாதாரம் படிச்சார்... நக்கல் அடிக்கும் எச்.ராஜா!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:47 IST)
இந்திய பொருளாதாரம் குறித்து பேச மு.க ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார் என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கையோடு இஸ்ரேலுக்கு பயணிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டார். 
 
இதனையடுத்து தலைவர் ஸ்டாலின், உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க விட்டுவிட்டு, இஸ்ரேலுக்கு போய் எதற்கு நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய வேண்டுமா? என கடுமையாக விமர்சித்து பேசினார். 
இந்நிலையில், இதற்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார் எச்.ராஜா. அவர் கூறியதாவது, தமிழக அரசு நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார். நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் பழனிசாமி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது தவறில்லை. 
 
எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்கும் ஸ்டாலின், இந்திய பொருளாதாரம் குறித்து பேச எந்த கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :