செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (13:30 IST)

2ஜி தீர்ப்பு குமாரசாமி தீர்ப்பை போன்றது: எச்.ராஜா அதிரடி!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
 
இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது இந்த தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டு நீதி வெல்லும் என கூறியுள்ளார்.

 
எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் 2ஜி தீர்ப்பு குறித்து பதிவிட்டுள்ளதில், குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்சநீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம் என கூறியுள்ளார்.