1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (12:34 IST)

திவ்யதர்ஷினி விவாகரத்து பெற இதுதான் காரணமா?

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.


 
டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது ஆண் நண்பர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், டிடி அதை மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் அது உண்மைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் டிடி தற்போது விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். 


 

 
அதாவது, டிடி சில சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இது அவரின் கணவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், சுச்சி லீக்ஸில் இவர் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது அவரது குடும்பத்தில் புயலை கிளப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே ஸ்ரீகாந்தும், டிடியும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில்தான், தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ய முடிவெடுத்த டிடி தற்போது நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.