திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:58 IST)

"காற்றின் மொழி” படத்தில் ரசிகர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த் நடித்துள்ள இப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான போட்டி ஒன்றை காற்றின் மொழி படக்குழு வெளியிட்டுள்ளது. கதைக்கான சூழலுடன் பொருந்திப்போகும் வகையில் சிறந்த பாடல் எழுதும் இருவரை கவிஞரும் பாடல் ஆசிரியருமான மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். இப்போட்டியின் பங்கேற்க 22 ம் தேதி இறுதி நாள் ஆகும்.

பாடலுக்கான சூழலையும் படக்குழுவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.