1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (11:32 IST)

ஜிம் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை: முதல்வர் பரிசிலீப்பாரா?

ஜிம் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை: முதல்வர் பரிசிலீப்பாரா?
கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் இருப்பினும் இன்னும் ஒருசிலருக்கு தளர்வுகள் கிடைக்கவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் ஜிம்கள் திறக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் முதல்வருக்கு ஒருசில கோரிக்கைகள் வைத்து ஜிம் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 
கருணைகொண்டு உடற்பயிற்சி நிலையத்தை விரைவில்‌ திறக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ ஐயா அவர்கள்‌ ஆவன செய்ய வேண்டும்‌. அரசு கூறும்‌ அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும்‌ நாங்கள்‌ பின்பற்றுவோம்‌ என உறுதி கூறுகிறோம்‌.
 
மேலும்‌ தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை தங்களின்‌ கனிவான பார்வைக்கு முன்வைக்கிறோம்‌. எங்களின்‌ இந்த துயரத்திற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருமாறு மிகதாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.
 
1. 60 நாட்களாக மக்களின்‌ பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சிக்கூடம்‌ மூடப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டங்களில்‌ எந்தவிதமான வருமானமும்‌ ஜிம் நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால்‌ வாடகை கேட்டு வணிக கட்டிட உரிமையாளர்கள்‌ எங்களை வற்புறுத்துகிறார்கள்‌. வருமானம்‌ இல்லாததால்‌ கடந்த ஊரடங்கு காலகட்டத்தில்‌ முழு வாடகை தொகை செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. எனவே ஊரடங்கு காலத்தில்‌ வாடகை வசூலிப்பதற்கு தடைவிதித்து எங்களை பெருந்துயரத்திலிருந்தும்‌, கடன்சுமை மேலும்‌ அதிகரிக்காமல்‌ தாயுள்ளம்‌ கொண்ட ஐயா முதலமைச்சர்‌ அவர்கள்‌ எங்களை காப்பாற்றும்படி தயைகூர்ந்து கேட்டுக்‌ கொள்கிறோம்‌.
 
2) கடந்த 60 நாட்களாக ஜிம் திறக்கவில்லை மின்சாரத்தையும்‌ பயன்படுத்தவில்லை. ஆனால்‌ சென்ற மாதம்‌ செலுத்திய மின்கட்டனத்தை கட்ட சொல்கிறார்கள. சென்ற மாதம்‌ செலுத்திய பெருந்தொகை தற்போது வருமானமே சுத்தமாக இல்லாத இந்த சூழ்நிலையில்‌ எங்களால்‌ மின்கட்டணம்‌ செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. எனவே மின்சாரம்‌ பயன்படுத்தாத ஊரடங்கு காலகட்டத்தில்‌ மின்‌ கட்டணத்தில்‌ இருந்து எங்களுக்கு விலக்களிக்க வேண்டும்‌ என தங்களை வணங்கி மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.
 
மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்கள்‌ எங்களின்‌ குறைகளை நேரில்‌ தெரிவிக்க நேரம்‌ ஒதுக்கி தருமாறு மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.
 
இவ்வாறு ஜிம் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது