திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (19:31 IST)

தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தப்பட்ட 400 கிலோ குட்கா: 3 பேர் கைது

gutka
தனியார் ஆம்னி பேருந்தில் பெங்களூரில் இருந்து 400 கிலோ குட்கா போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்து பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் பெங்களூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை பொருளை கடத்தி வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர்களிடமும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.