வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (12:29 IST)

சென்னை சென்ட்ரல் - புதுடில்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பும் இடம் திடீர் மாற்றம்.. பயணிகள் அதிருப்தி..!

Train
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் ஜிடி எக்ஸ்ப்ரஸ் ரயில் மே 9 முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது 
 
பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தினால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் சில ரயில்கள் கிளம்பும் இடம் மாற்றம் செய்யப்படுவதாகவும் அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி இடையே இயக்கப்படும் கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஒன்பதாம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது
 
மே 9 முதல் தாமரத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பும் என்றும் அந்த ரயில் எழும்பூர், ஆந்திர மாநிலம் கூடூர் வழியாக புதுடெல்லி செல்லும் என்றும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மாற்றம் அமைந்திருக்கும் என்றும் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran