1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (10:13 IST)

தட்டி கேட்ட தாத்தாவை போட்டு தள்ளிய பேரன்! சிக்கன் ரைஸ் வழக்கில் திடீர் திருப்பம்!

நாமக்கலில் சமீபத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.



சில நாட்களுக்கு முன்னதாக நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் ஒருவரும், பெண்மணியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார். பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணையில் சிக்கன் ரைஸில் பூச்சிமருந்தை கலந்தது, இறந்து போன தாத்தாவின் பேரன் தான் என்பது தெரிய வந்துள்ளது. நாமக்கலை சேர்ந்த பகவதி சமீபமாக தவறான நடத்தையுடன் இருந்து வந்ததை அவரது தாத்தாவும், தாயும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களை கொல்வதற்காக சிக்கன் ரைஸ் வாங்கி அதில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார் பகவதி. இதில் பகவதியின் தாத்தா பரிதாபமாக பலியான நிலையில் தாய் நித்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பகவதியை கைது செய்துள்ள போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K