செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (00:17 IST)

தேர்தலில் போட்டியிடும் பட்டதாரி இளம்பெண்

மாநகராட்சியின் 39 வது வார்டின் முன்னாள் வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக வினை சார்ந்த வி.நாகராஜன் , இவரது மூத்த மகள் என்.பிரவீனா (வயது 29), பொறியியல் கட்டிடவியல் ஆர்க்கிடெக் துறையில் 5 வருட படிப்பினை முடித்து, இதே காந்திகிராமம் பகுதியில் எலெக்ட்ரிக்கல் ஷாப் ஒன்றினை நடத்தி வருகின்றார்.

இந்த முறை நகர்மன்றம், மாநகராட்சியாக மாறியதோடு, அந்த 39 வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், இவரது மூத்த மகள் பிரவீனா என்பவரை தேர்ந்தெடுத்து அதிமுக தலைமை அலுவலகம் பரிந்துரை செய்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பட்டதாரி இளம்பெண் ஆன இவர், இந்த முறை 39 வது வார்டு கவுன்சிலராக, கரூர் மாநகராட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பட்டதாரி இளம் பெண்ணான பிரவீனா, அவரது தந்தை நகராஜனுடன் வந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். முன்னதாக கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் ஆசி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாநகராட்சியில் இன்று திமுக மட்டுமில்லாது பாஜக தேசிய கட்சியும், சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வந்த போது இந்த பட்டதாரி இளம்பெண் தாக்கல் செய்த இந்த வேட்பு மனு ஒரு வித்யாச அனுபவத்தினை ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.