1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (12:24 IST)

பள்ளிகளுக்கு மானியத்தொகை விடுவிக்க உத்தரவு!

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை உத்தரவு. 

 
தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ரூ.77.9 கோடியில் 50% அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மானியத்தொகை விடுவிக்கப்பட்டது. 
 
அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு, பராமரிப்பு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டது. மார்ச் 4-க்குள் இதனை வழங்கி, மார்ச் 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மேலும் மானியம் வழங்கும் முன் பள்ளிகளில் உள்ள பணியிடங்கள், மாணவர் விவரம், கட்டடங்களின் சான்று, சொத்து விவரம் ஆகியவற்றை சரிபார்த்து அதற்கேற்ப மானியம் விடுவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.