செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 20 ஜூன் 2021 (00:00 IST)

வலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.
 
சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.
 
 
தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
 
பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு  புத்திர பாக்கியம் கிட்டும்.
 
பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என கூறப்படுகிறது.
 
செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும்.
 
உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.
 
வலம்புரி சங்கின் காயத்திரி மந்திரம்: 
 
"பாஞ்ச ஜன்யாய வித்மஹே 
சங்க ராஜாய தீமஹி 
தந்தோ சங்கப் பரசோதயாத்".