செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!
செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு இலாகா இல்லாத அமைச்சர் ஆக இருக்கும் செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலுடன் கவர்னர் ரவி ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வழியாக உள்ளன.
அட்டர்னி ஜெனரல் அவர்களுடன் நடந்த ஆலோசனையை அடுத்து இந்த முடிவை ஆளுநர் ரவி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran