1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:54 IST)

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை… நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார் – முதல்வர் நம்பிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை ஒட்டி தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டது.

ஆளுனர் ஒப்புதல் தாமதமாகி வந்த நிலையில் ஆளுனர் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஆளுனர் தரப்பில் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இன்று நடைபெற்ற ஆளுனர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘எழுவர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ எனக் கூறியுள்ளார்.