செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:25 IST)

அமைச்சருக்கு அழைப்பு விடுக்காமல் கவர்னர் நடத்தும் மாநாடு: பெரும் பரபரப்பு

Governor
தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எந்தவித அழைப்பும் விடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாளை ஊட்டியில் '2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்'  என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்த உள்ளார். இந்த மாநாடு குறித்து தமிழக அரசிடமோ உயர்கல்வித் துறை அமைச்சரிடமோ, எந்தவித ஆலோசனையும் அவர் கேட்கவில்லை என்றும் இந்த மாநாட்டிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்திய தேனீர் விருந்தில் முதலமைச்சர் உள்பட திமுக அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு பதிலடியாக கவர்னர் அழைப்பு விடுக்காமல் இந்த மாநாட்டை நடத்துகிறாரா? என்ற எண்ணம் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது