புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (21:54 IST)

கார் நம்பர் வாங்க பல லட்சம் செலவழித்த ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ

ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படத்தில்   நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.45 கோடி சம்பளம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில்  நடித்ததன் நினைவாக  ஜூனியர் என்.டி.ஆர் ஒரு புதிய காரை வாங்கியுள்ளதகவும், அந்தக் காரின் நபர் வாங்க பல லட்சம் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பி . எம்.டபள்யூ,  ரோல்ஸ் ராய்ஸ் என வகைவகையாக கார் கலேக்சன் வைத்துள்ள ஜுனியர் என்.டி.ஆர் 9999 என்ற தனது ராசியான எண்ணைய  நம்பராக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.