செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (13:56 IST)

விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்.ஏ.சி

விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்.ஏ.சி
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் பெரிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
விஜயகாந்தை வைத்து 17 திரைப்படங்களை இயக்கி உள்ளதாகவும்  நட்பு என்றால் என்ன என்பதை விஜயகாந்துடன் பழகியவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்
 
அப்படிப்பட்ட மனிதர் இன்று இப்படி ஒரு நிலையில் இருப்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்