வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (18:26 IST)

கணக்கு வாத்தியின் தகாத சேட்டை; நெளியும் மாணவிகள்... அரசு பள்ளியில் வேதனை!

அரசு பள்ளி கணக்கு ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தாகத முரையில் நடந்துக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
புதுக்கோட்டை மாவட்டம் , அமரடக்கி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருபவன் மாரியப்பன். மாரியப்பன், அந்த பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுப்பட்டு வந்திருந்துள்ளான். 
 
மாணவிகளை புத்தகங்களை வாசிக்கச் சொல்வது போல அருகில் வரச்சொல்லி அவர்களை கில்லுவது, தடவுவது என தகாத செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளான். மாணவிகள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து அவன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இதனால் அத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கணக்கு வாத்தியார் மாரியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.