வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (11:56 IST)

வானத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள் – நியூசிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

நியூஸிலாந்தின் மாஸ்டர்டன் பகுதி விமானதளத்தில் நேற்று அதிகாலை இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர்டன் நகரிலிருந்து அதிகாலை கிளம்பிய தனியார் விமானம் ஒன்று வானில் பறக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் மாஸ்டர்டன் தளத்தில் இறங்குவதற்காக ஒரு விமானம் வந்துள்ளது. திடீரென எதிரெதிரே சந்தித்து கொண்ட விமானங்கள் மோதி வெடித்து சிதறின. எரிந்த விமானத்தின் பாகங்கள் வானத்திலிருந்து விமான தளத்தில் விழுந்தன.

இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு விமானங்களிலும் பயணிகள் யாரும் இல்லை என்பதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தை ஓட்டிய விமானிகள் இருவரும் விபத்தில் உயிரிழந்தார்கள். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.