1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (10:40 IST)

கொங்கு மண்டல மக்களை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி - தினகரன் விளாசல்

கொங்கு மண்டல மக்களை எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏமாற்றி வருகிறார்கள் என தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மக்களை ஏமாற்றிவரும் எடப்பாடி விரைவில் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்.
 
கொங்கு மண்டலத்தை சார்ந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் அங்குள்ள மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்யாமல் அவர்களது உறவினர்களுக்கே உதவி செய்தும், காண்டிராக்ட்டுகளை கொடுத்தும் அவர்களை வாழ வைத்து வருகிறார்கள்.
விரைவில் அவர்களுக்கெல்லாம் கொங்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தினகரன் ஆவேசமாக பேசினார்.