1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increases in Chennai

ரூ.33,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

Gold Rate
தங்கத்தின் விலை ரூ.33,000-த்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை. 
 
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் கடந்த வாரம் ரூ.32,000 தாண்டியது. 
 
இந்நிலையில் தற்போது வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை கண்டுள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை ஆகிறது. அதாவது, ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை ஆகிறது. 
 
இப்படியே இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை ரூ.33,000-த்தை தாண்டிவிடும் என அஞ்சப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
அடேங்கப்பா! ட்ரம்ப்புக்கு இந்தியாவுல இவ்வளவு சொத்துகளா?