வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (10:13 IST)

3000 டன் தங்கம் கிடைத்தது என்ற செய்தி பொய்யா? திடுக்கிடும் தகவல்

3000 டன் தங்கம் கிடைத்தது என்ற செய்தி பொய்யா?
உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா என்ற பகுதியில் 3000 டன் தங்கம் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்தியா திடீரென பணக்கார நாடாக ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்த புவியியல் வல்லுநர்கள் கூறியபோது சோன்பத்ரா மலைப்பகுதியில் 3000 டன் தங்கம் புதைந்து இருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் அதிகபட்சம் அங்கு 160 கிலோ தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே உண்மையில் எவ்வளவு தங்கம் அங்கே இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். 
 
இது குறித்து புவியியல் ஆய்வாளர் ஒருவர் கூறியபோது சோன்பத்ரா மாவட்டத்தை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் தங்களது நாட்டிற்கு சொந்தமான தங்கத்தை கோட்டைக்கு இருபுறமும் புதைத்து வைத்ததாகவும் இவருடைய காலகட்டத்தில் தான் அதிக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த தங்கம் தான் தற்போது கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் 
 
3000 டன்கள் தங்கம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 100 கிலோ முதல் 200 கிலோ வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
3000 டன் தங்கம் கிடைத்தது என்ற செய்தி பொய்யா?