ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (13:40 IST)

கேபி அன்பழகன் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதலா?

முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பழகன் வீட்டில் 3 கிலோ தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் சொந்தமான இடங்களில் இருந்து இதுவரை ரூ.1.60 கோடி பணமும் மூன்று கிலோ தங்கமும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது