வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2019 (21:26 IST)

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 63. 
 
மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில மணி நேரங்களாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
 
இந்தியாவின் முதல் ஐஐடி பட்டாதாரியான கோவா முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.