வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (15:06 IST)

அலிபாபா டெம்பரவரி தான்... அம்பானியின் இந்த சரிவு நிரந்தமல்ல!!

அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு தற்காலிகமானதே என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இந்தியாவில் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சௌதி அராம்கோ நிறுவனம் நேற்றைக்கு ஒரேநாளில் 320 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
எனவே இந்நிறுவனம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவூதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ள நிலையில், சவூதி அராம்கோ நிறுவனத்துக்கு 320 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 
நேற்று சவூதி அராம்கோ நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் விலையை 20% குறைத்து வெளியிட முடிவு செய்தது. இதனால்,அங்குள்ள பங்குச் சந்தை என்பது 9.3% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
 
இந்நிலையில் சவூதி அராம்கோ நிறுவனத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் 320 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. அத்துடன், அராம்கோ சவூதி நிறுவனத்தின் பங்குதாரரான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் முகேஸ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 56, 000 கோடி ரூபாய் இழந்துள்ளார். 
 
சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் அதிபா் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 
 
இருப்பினும் அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு தற்காலிகமானதே, அவரது தொலைத்தொடர்பு நிறுவனம் அவருக்கு லாபம் அளிப்பதால் ஆசிய பணக்காரா் பட்டியலில் முதலிடத்தை அவர் விரைவில் மீண்டும் பிடிப்பார் என தெரிகிறது.