செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (07:16 IST)

நள்ளிரவில் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை: சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள ரவுடிகள் வீட்டில் நேற்று நள்ளிரவில் திடீரென காவல்துறையினர் சோதனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சென்னையில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் ரவுடிகளின் வீடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் காவல் துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் இரவில் அதிரடியாக சோதனை நடத்தினர். 
 
இந்த சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களை வீடுகளை கண்காணிக்க வேண்டும் என காவல் துறை இயக்குனர் உத்தரவிட்ட நிலையில் இந்த சோதனை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.