திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:24 IST)

வயிறுவலி என சொல்லிவிட்டு சென்ற மாணவன் – விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை !

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவன் ஒருவர் தன்னுடய அறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சூலூர் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரின் மகன் ஹரிஷ். இவர் காரமடை கண்ணார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி  11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் இவர் வயிறு வலி என ஆசிரியரிடம் சொல்லி விட்டு விடுதிக்கு சென்றுள்ளார்.

பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் விடுதிக்கு சென்ற போது ஹரிஷை தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கும் மாணவனின் பெற்றோருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவனின் பெற்றோர் வந்து பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்ததால் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து போலீஸார் வந்து வழக்குப் பதிவு செய்து சக மாணவர்களிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.