1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 29 ஜூலை 2017 (05:25 IST)

52 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடிக்கு சென்ற முதல் பேருந்து

கடந்த 1964ஆம் ஆண்டு இராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் பயங்கர புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்த்தால் அந்த பகுதியே முற்றிலும் வெள்ளத்தால் அழிந்தது. ரயில் நிலையம், தேவாலயம், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் இடிந்து சிதிலம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியே தனிமைப்படுத்தப்பட்டது.



 
 
இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வசதியாக சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை 9.5 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
 
52 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட சாலையில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.