செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:36 IST)

கடம் உமா சங்கர் என் இடுப்பை கிள்ளினார் - தொகுப்பாளி ஸ்ரீ ரஞ்சனி

கடம் உமாசங்கர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீரஞ்சனி. 
கடம் உமா சங்கருடன் மீ டூ சம்பவம் நடந்தது எனவும் அதை ஆதாரத்தோடு அதற்கு உரிய ஆதாரமும் என்னிடம் உள்ளது என கூறிய ஸ்ரீரஞ்சனி, இது என் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கண் முன்பு பட்டப்பகலில் நடந்தது என்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், பாடகியுமான ஸ்ரீ ரஞ்சனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2010ம் ஆண்டு நான் உமாசங்கரிடம் பேசினேன்  அப்போது நான் ஆர்.ஜே.வாக இருந்தேன். அந்த நேரத்தில் என் ரேடியோ ஸ்டேஷனுக்கு விருந்தினராக வந்த அவர். என் செல்போன் எண்ணை வாங்கி எனக்கு  ஆபாசமான வார்த்தைகளால் மேசேஜ் அனுப்பினார். 
 
7 ஆண்டுகளுக்கு பிறகு கழித்து நான் மீடியாவில் வேலை செய்தபோது யூடியூப் சார்ந்த புராஜெக்ட் தொடர்பாக அவர் அங்கு வந்தார். என்னை கடந்து சென்றபோது என் இடுப்பில் கிள்ளினார்.  இந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அன்றில் இருந்து  அவர் தொடர்பான எந்தவொரு புராஜெக்டுகளிலும்  நான் வேலை செய்வதை தவிர்த்தேன்.
 
அதற்கு பிறகு அவர் கடவுள் பற்றியும், தான் ஒரு பக்திமான் என்றும் பேசுவது பற்றியும் கேட்கும் போதெல்லாம் எனக்கு  எரிச்சலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரஞ்சனி. 
 
ஸ்ரீ ரஞ்சனி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். அவர் போட்ட ட்வீட்டை பார்த்த ஒருவர் இந்த பால் வடியும் மூஞ்சியில் இவ்வளவு காமக்கொடூரமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.