வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (20:19 IST)

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியல் தடம் பதித்த முக்கிய அரசியல் வாதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். சமீபத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தொகுதி எம்பியாக திமுக கட்சி சாரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
இந்நிலையில் மக்கள் பிரச்சனைக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மேடைகளில் பேசியும் வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஓய்வின்றி வைகோ செயல்பட்டதால் அவரது உடல் நிலைநிலை பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து மதுரையிலிருந்து வைகோ சென்னைக்கு வரும்போது, யாரும் அன்பின் மிகுதியால் பார்க்க வேண்டும் எனவும் போனில் தொடர்புகொள்ள வேண்டும். வைகோ நல்ல உடல் நிலையில் இருக்கிறார் எனவும் மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மதுரை விமான நிலையத்திலிருந்து   விமானம் மூலம் வைகோ சென்னைக்கு வந்தான் இன்று. அப்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.