ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (16:00 IST)

ஒரு பொம்மையை வைத்து வீடியோ தயாரித்துள்ளனர் - ஜெ.வின் தோழி கீதா பேட்டி

ஜெயலலிதாவை போல் ஒரு பொம்மையை தயாரித்து பொய்யாக ஒரு வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளனர் என ஜெ.வின் நீண்ட நாள் தோழியான கீதா தெரிவித்துள்ளார்.


 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்த வரை பல சந்தேகங்களை எழுப்பியர் கீதா. மேலும், ஜெ.வை சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டனர் என அவர் பகீரங்கமாக புகார் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று வெளியான ஜெ.வின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த போது “  ஜெ.வின் மரணம் குறித்து டிசம்பர் 20ம் தேதியே நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அப்போது ஏன் வீடியோ வெளியிடப்படவில்லை? எதற்காக ஒரு வருடம் காத்திருந்தனர்?

 
ஜெயலலிதாவை போல் ஒரு பொம்மையை தயார் செய்து மார்பிங் செய்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஜெ.வின் கால்கள் பொம்மை கால்கள் போல இருக்கிறது. அதில் எந்த அசைவும் இல்லை. அவர் முகத்தில் எந்த பாவணையும் இல்லை. கைகள் ரோபோ போல் செயல்படுகிறது. 
 
இதைக் கண்டு பாமர மக்கள் ஏமறலாம். ஆனால், படித்தவர்களை முட்டாளாக்க முடியாது. ஆபத்தான நிலையில்தான் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பிரதாப் ரெட்டி கூறியிருக்கும் போது இந்த வீடியோவை எப்படி எடுத்தார்கள்? இதுபற்றி நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெ.வை கொன்றது சசிகலா குடும்பம்தான். அதை நான் நிரூபிப்பேன்” என கீதா கூறியுள்ளார்.