1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (14:30 IST)

டிடிவி-இன் கீழ்த்தரமான செயல்; இளவரசியின் மகள் ஆவேசம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த வீடியோ ஒன்றை டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று ஊடகங்களில் வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இந்த வீடியோ சில சந்தேகங்களுக்கு தீர்வாக இருந்தாலும், ஆர்கே நகர் தேர்தலை மனதில் வைத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் ஜெயலலிதா இந்த நிலமையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டது தவறு என சசிகலா குடும்பத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
 
அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நைட்டி அணிந்து, முகம் கலையிழந்து நோயுற்று இருக்கிறார். அதனை வெளியிட்டது டிடிவி தினகரனின் கீழ்த்தரமான செயல் என இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆவேசமாக கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த பதிவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு டிடிவி உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என கூறியுள்ளார்.