பிக் பாஸில் நீங்க சொன்னது இன்னும் நியாபகமிருக்கு! கமலை மீண்டும் சீண்டிய காயத்ரி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட, சர்ச்சையான நபராக மாறிய காயத்ரி ரகுராமுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு நிலவியது. இதனால் காயத்ரி ரகுராம் குறித்து மீம்ஸ்கள் அதிகமாக வந்தது.
சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் காயத்ரி ரகுராம் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மைய்ய கட்சியின் தலைவர் கமல் ஹாசன் "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே" என்று தெரிவித்திருந்தார். இதற்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும், மன்னிக்குறவங்கள விட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள். எனவே, இந்துக்களிடம் மன்னிப்பு கூறி பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்று காயத்ரி கூறியுள்ளார்.