வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (17:24 IST)

ராஜீவ் காந்தியை அன்புடன் வரவேற்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் டுவீட்

சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகியாக இருந்த ராஜீவ்காந்தி திடீரென அக்கட்சியிலிருந்து விலகினார் என்பதும் நேற்று அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே 
 
திமுகவில் இணைந்த கொடுத்து ராஜீவ் காந்தி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி, மாநில உரிமை,
மதச்சார்பின்மை, சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இனைத்து கொண்டேன்! என்று தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவரை வரவேற்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் - தமிழர் அடையாளம் - அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில் இணைத்து கொண்டுள்ள அன்பு சகோதரர் ராஜீவ் காந்தி அவர்களை அன்போடு வரவேற்கிறோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார்