சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் சிலிண்டர்: அமைச்சர் பெரியசாமி தகவல்
சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
முகவரியே இல்லாத சாலையோர கடைகளுக்கு 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கும் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது சாலையோர கடைகள் வைத்து இருப்பவர்கள் வணிக நோக்கங்களுக்கான சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்ற வகையில் 2 கிலோ 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது