செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (08:48 IST)

பாஜக விழாவில் வெடித்த கேஸ் பலூன்கள்! – சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!

சென்னையில் உள்ள பாடியில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கேஸ் பலூன் வெடித்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கடந்த வியாழன் முதலாக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பாடியில் மோடியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவிற்கு அப்பகுதி பாஜக பிரமுகர் பிரபாகரன் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் விழாவை சிறப்பிக்க 1000 கேஸ் பலூன்களை வானில் பறக்க விடவும் திட்டமிட்டுள்ளனர். கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தபோது அதன் தீப்பொறிகள் பலூன்களில் பட்டதால் கேஸ் பலூன்கள் வெடித்து சிதறியது. இதனால் பலூன்களின் எரிந்த ரப்பர் துண்டுகள் சுற்றியிருந்த பலரின் மீது விழுந்ததில் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையிடம் அனுமதி பெறாமல் விழா நடத்தியது, வெடிக்கும் பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்டவற்றிற்காக பாஜக பிரமுகர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.’