1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Deputy CM OPS in hospital for regular checkup

துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு பரிசோதனை! – மருத்துவமனையில் அனுமதி!

Tamilnadu
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த மே மாதம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெள்யாகியுள்ளன. பரிசோதனை முடிந்து மாலைக்குள் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தினமும் 3 லட்சம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: உலக கொரோனா நிலவரம்!